ஆப்நகரம்

Karunanidhi Health: கருணாநிதியை நலம் விசாரிக்க வருகிறார் சந்திர பாபு நாயுடு

திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க நாளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வர திட்டமிட்டுள்ளார்.

Samayam Tamil 3 Aug 2018, 4:38 pm
சென்னை : திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க நாளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வர திட்டமிட்டுள்ளார்.
Samayam Tamil Chandrababu Naidu


திமுக தலைவர் கருணாநிதியின் உடல், வயது மூப்பின் காரணமாக நலிவடையத் தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால், உடனே சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவருக்கு மருத்துவ குழு தீவிர சிகிச்சை அளித்தநிலையில் அவரின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்திரபாபு வருகை ;
இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலையை விசாரிக்க நாளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி