ஆப்நகரம்

விலங்குகள் நல வாரியத்தால் பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு ஆபத்தா?

ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு புதிய விதிகளை விதிக்க விலங்குகள் நலவாரியம் முடிவு செய்துள்ளதாக அதன் சேர்மன் குப்தா தெரிவித்தார்

TNN 15 Dec 2017, 6:42 pm
சென்னை: ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு புதிய விதிகளை விதிக்க விலங்குகள் நலவாரியம் முடிவு செய்துள்ளதாக அதன் சேர்மன் குப்தா தெரிவித்தார்.
Samayam Tamil animal welfare board framing guidelines to hold jallikattu in tamil nadu
விலங்குகள் நல வாரியத்தால் பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு ஆபத்தா?


இந்திய விலங்குகள் நல வாரியத்தின் புதிய தலைவரான இன்று சென்னைக்கு வருகைத் தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,”மக்களின் பாரம்பரியம், கலாச்சாரமான ஜல்லிக்கட்டை முடக்குவது எங்கள் நோக்கமல்ல. விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைகளை தடுப்பது மட்டுமே.

எனவே, ஜல்லிக்கட்டு விளையாட்டில் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படாமல் இருக்க சில வழிமுறைகளைக் கொண்டு வர உள்ளோம். இந்த வழிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு நடக்கும் வகையில், இந்த வழிமுறைகள் தமிழக அரசிற்கு அனுப்பப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜல்லிக்கட்டில் பீட்டாவின் நிலைப்பாடு தவறானது என்றும், மத்திய அரசின் ரேபீஸ் தடுப்புத் திட்டத்தை சென்னையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி