ஆப்நகரம்

முதல்வரின் நிதியுதவியை வாங்க, அனிதா குடும்பத்தினர் மறுப்பு

முதல்வர் பழனிசாமி அறிவித்த நிதியுதவியை அனிதா குடும்பத்தினர் வாங்க மறுப்பு தெரிவித்தனர்.

TNN 3 Sep 2017, 3:50 pm
முதல்வர் பழனிசாமி அறிவித்த நிதியுதவியை அனிதா குடும்பத்தினர் வாங்க மறுப்பு தெரிவித்தனர்.
Samayam Tamil anitha family neglect tn govt fund
முதல்வரின் நிதியுதவியை வாங்க, அனிதா குடும்பத்தினர் மறுப்பு


நீட் தேர்வால் உயிரிழந்த தமிழக மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர்.

தமிழக அரசும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அரியலூர் மாவட்ட கலெக்டர் அனிதாவின் குடும்பத்தை நேரில் சந்தித்து தமிழக அரசின் நிதியுதவியை வழங்க முற்பட்டார். அப்போது, அனிதாவின் குடும்பத்தினர் நிதியுதவியை வாங்க மறுப்பு தெரிவித்தனர். அனிதாவின் குடும்பத்தினரை சமதானப்படுத்த மாவட்ட ஆட்சியர் பலமுறை எடுத்துக்கூறியும், நிதியுதவியை பெற அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.


அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் அனிதாவின் குடும்பத்துக்கு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் அறவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி