ஆப்நகரம்

அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு!

அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 18 Oct 2020, 2:38 pm
கொரோனா வைரஸ் தொற்றால் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு நடத்தியது.
Samayam Tamil அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்


இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொறியியல் மாணவர்களுக்கு முதன்முறையாக ஆன்லைனில் நடைபெற்ற, இறுதி செமஸ்டர் தேர்வின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

தேர்வு முடிவுகளை www.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை விடாது..! 15 மாவட்டங்களுக்கு குறி..!

சில மாணவர்களுக்கு WH1 என தேர்வு முடிவு காண்பிப்பதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு குறித்தும் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. சில இறுதியாண்டு மாணவர்கள் வளாகத் நேர்முகங்கள் மூலம் பணிக்கு தேர்வாகியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

அடுத்த செய்தி