ஆப்நகரம்

இன்ஜினியரிங் படிக்கிறீங்களா.. பகவத் கீதையை எடுத்துட்டு போங்க!

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல் படிப்பும், அதில் பகவத் கீதை பாடமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Sep 2019, 1:02 pm
சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல்
Samayam Tamil Untitled collage

தத்துவவியல் படிப்பும், அதில் பகவத் கீதை பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் குழும அறிவுறுத்தலின் படி இந்தப் படிப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொறியியலில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் மூன்றாவது பருவத்தில் ஆறாவது பாடமாக தத்துவவியல் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் பகவத் கீதை கற்றுத்தரவேண்டும் என பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது விருப்பப் பாடமாக அல்லாமல் கட்டாயப் பாடமாக படிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தொடங்கிய மூன்றாவது பருவத்திலேயே இந்தப் படிப்பு சேர்க்கப்பட்டுவிட்டது.
அகில இந்திய தொழில்நுட்பக் குழும அறிவுறுத்தலின் படி இந்தப் படிப்பு சேர்க்கப்பட்டாலும் இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது. அனைத்து மதங்களைச் சேர்ந்த மாணவர்களும் படிக்கும்போது இந்து மதத்தின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதையை மட்டும் கட்டாய பாடமாக கொண்டுவரும்போது மாணவர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் அமித் ஷா ஒரே நாடு ஒரே மொழி என்ற ரீதியில் இந்தி மொழியை பொது மொழியாக கொண்டுவரவேண்டும் என்றார். அதன்பின் அந்தக் கருத்து சர்ச்சையானது. இந்தி மொழியைத் திணிப்பதைப் போல் இந்து மதத்தையும் திணிக்கும் விதமாகவே பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதையை கட்டாய பாடமாக கொண்டுவரப்பட்டுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த செய்தி