ஆப்நகரம்

அண்ணா பல்கலை தன்னாட்சி கல்லூரிகள் பட்டியல்; பிஎஸ்ஜி முதலிடம்

தமிழகத்தில் உள்ள தன்னாட்சி கல்லூரிகளில், பிஎஸ்ஜி கல்லூரி முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

TNN 14 Jun 2016, 6:36 pm
தமிழகத்தில் உள்ள தன்னாட்சி கல்லூரிகளில், பிஎஸ்ஜி கல்லூரி முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
Samayam Tamil anna university non autonomous colleges ranking psg institute of technology and applied research retains top position
அண்ணா பல்கலை தன்னாட்சி கல்லூரிகள் பட்டியல்; பிஎஸ்ஜி முதலிடம்


தமிழகத்தில் உள்ள தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில், கோவையை சேர்ந்த பிஎஸ்ஜி இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைட் ரிசர்ச் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

இந்த கல்லூரி நிறுவனத்தில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 97% ஆக உள்ளது. இதுவே, முதலிடத்தில் நீடிக்க முக்கிய காரணமாகும். கடந்த 2014, 2015ம் ஆண்டுகளிலும் பிஎஸ்ஜி கல்லூரி முதலிடத்திலேயே காணப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகள் பட்டியலில், 522 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், 9 கல்லூரிகள் மட்டும் தொடர்ச்சியாக, 90%க்கு மேல் தேர்ச்சி விகிதத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி