ஆப்நகரம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அண்ணா பல்கலை.,மாணவர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TOI Contributor 11 Jan 2017, 5:21 pm
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil anna university students stage protest demanding removal of ban on jallikattu
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அண்ணா பல்கலை.,மாணவர்கள் போராட்டம்


இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை எப்படியேனும் நடத்தியே தீர வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழகம் முழுவதும் வலுத்து வரும் குரல்கள், பல்வேறு போராட்டங்களாக எதிரொலித்துள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களையும், பேரணிகளையும் மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து நடத்துகின்றனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டம் நடத்தினால், அடையாள அட்டை பறிமுதல் செய்யப்படும் என கல்லூரி நிர்வாகம் மிரட்டிய காரணத்தால், மாணவர்கள் சிலர் அங்கிருந்து களைந்து சென்று விட்டனர். இதனால், மாணவர்கள் சுமார் 150 பேர் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மூத்த ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்துவதற்கு பதிலாக கோரிக்கை மனுவாக கொடுக்க கூறி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது. அதையும் மீறி இந்த போராட்டம் நடந்துள்ளது. எந்த ஒரு அசம்பாவித சம்பவங்கள் அல்லது பிரச்னைகளையும் பல்கலைக்கழகம் விரும்பவில்லை என்றார்.
Anna University students stage protest demanding removal of ban on jallikattu

அடுத்த செய்தி