ஆப்நகரம்

மாணவர்களே உஷார்: அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாகக் கூறி, முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது

Samayam Tamil 10 Jun 2022, 11:53 am
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவுக்கு ஜூன் 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 51 இலவச மையங்கள் இருந்த நிலையில், தற்போது 110 இலவச மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
Samayam Tamil அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்


கலந்தாய்வு முடிந்து 7 நாட்களுக்குள் மாணவர்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும். அதற்குள் தொகையைச் செலுத்தாவிட்டால், 2ஆம் கட்ட முன்னுரிமை கோரியுள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு வசூலிக்கப்பட்ட அதே கட்டணமே, இந்த ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கு வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாகக் கூறி, முன்பணம் கேட்டு மோசடி பேர்வழிகள் மாணவர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானது என்று தெரிவித்துள்ளது. NRI மாணவர்களை குறிவைத்து அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் போலியானது எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்குமா?
மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்தை மட்டுமே அணுக வேண்டும் என தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், முதல் செமஸ்டர் கட்டணத்துடன் ரூ.1 லட்சம் கட்டினால் முற்றிலும் இலவசமாக படிக்கலாம் என்று பல மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியதாக சென்றுள்ள போலி இ-மெயில்கள் பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி