ஆப்நகரம்

"மன்னிப்பா.. அந்த பேச்சுக்கே இடமில்லை".. உதயநிதிக்கு பறந்த பதில் நோட்டீஸ்.. அண்ணாமலை அதிரடி!

உதயநிதி ஸ்டாலின் அனுப்பிய நோட்டீஸுக்கு அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 21 Apr 2023, 3:24 pm
சென்னை: திமுகவினரின் சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளித்து அனுப்பிய நோட்டீஸில் இவ்வாறு அண்ணாமலை கூறி இருக்கிறார்.
Samayam Tamil udhaya annamalai


தனது கையில் கட்டியிருந்த ரபேல் வாட்ச் தொடர்பாக திமுகவினர் கேள்வி எழுப்பியதை அடுத்து, அவர்களின் ஊழல் பட்டியலை வெளியிடப் போவதாக அறிவித்தார் அண்ணாமலை. இதனைத் தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி DMK FILES என்ற பெயரில் திமுகவினரின் சொத்துப் பட்டியல் என ஒரு எக்ஸல் ஷீட்டை அண்ணாமலை வெளியிட்டார்.

அதில் திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு உட்பட 10 பேரின் சொத்து விவரங்கள் இடம்பெற்றிருந்தன. சுமார் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் அந்த சொத்து மதிப்புகள் இருந்தன.

ரூ.50 கோடி கேட்டு நோட்டீஸ்

இந்த ஆவணத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ. 2,030 கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, தங்களை பற்றி ஆதாரம் இல்லாமல் தகவல் வெளியிட்டதாக அண்ணாமலைக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த சூழலில், தன்னை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியதாக கூறி உதயநிதி ஸ்டாலின் சார்பில் அண்ணாமலைக்கு அண்மையில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கொடுமை.. பென்சன் பணம் வாங்க.. உச்சி வெயிலில் தார்ச்சாலையில் நடந்து செல்லும் மூதாட்டி.. அதிர்ச்சி வீடியோ
"மன்னிப்பு கேட்க வேண்டும்"

அதில், "இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 48 மணிநேரத்திற்குள் தன் மீது சுமத்திய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்காத பட்சத்தில், ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கறிஞர் நோட்டீஸுக்கு பதில் நோட்டீஸை அண்ணாமலை இன்று வழங்கி இருக்கிறார்.

"மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை"

அந்த நோட்டீஸில், மன்னிப்பு கேட்பது அல்லது நஷ்ட ஈடு கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என அண்ணாமலை கூறி இருக்கிறார். மேலும், தான் வெளியிட்ட அனைத்து தகவல்களும் பொதுவெளியில் உள்ளவைதான் என்றும், அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது எனவும் கூறியுள்ளார். அதேபோல, தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்துவதற்காக இந்த ஆவணங்களை வெளியிடவில்லை எனக் கூறியிருக்கும் அண்ணாமலை, திமுகவினரின் முறைகேடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவற்றை வெளியிட்தாகவும் தெரிவித்துள்ளார்.

சட்டரீதியாக சந்திப்பேன்

இதற்காக திமுகவினரிடம் மன்னிப்பு கேட்பதற்கோ, நஷ்ட ஈடு கொடுப்பதற்கோ வாய்ப்பே இல்லை. இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தால் சட்டரீதியாக அதை சந்திப்பேன் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் அனுப்பிய நோட்டீஸுக்கு, அண்ணாமலை இவ்வாறு பதில் நோட்டீஸ் அனுப்பி இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி