ஆப்நகரம்

மேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லித்துறை காப்புக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிாிழிந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 23 Apr 2019, 11:43 am
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லித்துறை காப்புக்காடு பகுதியில் பாக்கு மரத்தை முறிக்க முயன்ற காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிாிழந்தது.
Samayam Tamil WhatsApp Image 2019-04-23 at 9.45.38 AM.


மேட்டுப்பாளையம் வனச்சரகம், சுண்டப்பட்டி பிரிவு, நெல்லித்துறை காப்புக்காடு எல்லையிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ராணிமகாகாரர் பாக்குத் தோட்டம். இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக வந்த ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று பாக்கு மரத்தை முறித்தது.

பாக்கு மரம் அவ்வழியாக சென்ற மின்கம்பிகள் மீது விழுந்தது. இதில் மரத்தின் மீது மின்சாரம் பாய்ந்தது. யானை மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் அந்த யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிாிழந்தது.

இது தொடா்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் மின் வேலிகள் யானைகளுக்கு பேராபத்தாக விளங்குகின்றன. இங்கு உள்ள மின்வேலிகளை சூரிய சக்தியில் இயங்கும் மின்வேலிகளாக மாற்றினால் மட்டுமே யானைகளின் இறப்பை கட்டுப்படுத்த முடியும் என்று அவா்கள் வேதனை தொிவித்துள்ளனா்.

மேலும் உயிரிழந்த காட்டு யானை கால்நடை மருத்துவா்கள், தன்னாா்வலா்கள் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.

அடுத்த செய்தி