ஆப்நகரம்

ராமநாதபுரத்தை ஸ்தம்பிக்க வைத்த சிஏஏ எதிர்ப்பு பேரணி!

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறவலியுறுத்தி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் ராமநாதபுரத்தில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Samayam Tamil 19 Feb 2020, 4:33 pm
குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கீடு ஆகியவற்றைத் திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் இன்று சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
Samayam Tamil ராமநாதபுரம் போராட்டம்


இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்தப் பேரணியில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லீம் அமைப்புகள், மாணவர்கள், பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் கலந்துகொண்டனர். பிறமாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் ராமநாதபுரமே வாகன நெரிசலில் ஸ்தம்பித்தது

ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைப் பேச்சு: தெறித்து ஓடும் திமுக எம்.பிக்கள்!

ராமநாதபுரத்தில் ஜமாஅத்துல் உலாமாசபை தலைமையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், திமுக, மதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தமிழ்ப்புலிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மே17 இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்று போராட்டம் நடத்தினர்.

சிஏஏ எதிர்ப்பு: சட்டமன்றத்தை நோக்கி படையெடுக்கும் போராட்டக்காரர்கள்!

50க்கும் குறைவான போலீஸார் பாதுகாப்பிற்கு வந்திருந்தனர். இருந்தபோதிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட காரணத்தினால், போலீசார் போராட்டம் நடத்துபவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் யாரும் கலைந்து செல்லும் முடிவில் இல்லை. இதனால், ராமேஸ்வரம் செல்லும் அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பி அனுப்பப்பட்டது.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படும்?

இதனால் இன்று என்றுமில்லாத அளவிற்கு ராமநாதபுரம் நகர் முழுவதிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறைந்த அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால், போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அடுத்த செய்தி