ஆப்நகரம்

கே.சி.வீரமணியை வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை: லாபி வேலைக்கு ஆகலையோ!

முன்னாள் அமைச்சர் வீரமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

Samayam Tamil 16 Sep 2021, 8:04 am
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
Samayam Tamil kc veeramani


திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே இது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே ஊழல் பட்டியலையும் அதற்கான ஆதாரங்களையும் எடுத்துவைத்திருந்த நிலையில் ஆட்சிக்கு வந்த பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுகவிடம் அதை எதிர்பார்க்க முடியாது: சி.வி.சண்முகம் விமர்சனம்!
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்கள் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மற்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக எந்த முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடக்கும், விசாரணை வளையத்துக்குள் யார் கொண்டு வரப்படுவார் என கேள்விகள் எழுந்தது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் அது முடிந்த பின்னரே அடுத்த ரெய்டு இருக்கும் என நமது சமயம் தமிழில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.

அந்த வகையில் கூட்டத் தொடர் முடிந்த இரு நாள்களில் தற்போது முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் குறி வைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆரம்பப் பள்ளிகள் திறப்பு: முதல்வர் எடுக்கும் முடிவு இதுதான்!
கே.சி.வீரமணிக்கு சொந்தமான சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னதாக திமுக முக்கிய புள்ளி ஒருவர் மூலம் கே.சி.வீரமணி ரெய்டிலிருந்து தப்பிவிடுவார் என்றொரு தகவலும் வந்தது. ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறையோ தங்களுக்கு வந்த புகார், கிடைத்த ஆதாரங்கள் மூலம் சோதனையை தொடங்கி நடத்தி வருகிறது. விரைவில் இது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாக உள்ளன.

அடுத்த செய்தி