ஆப்நகரம்

Anti-Sterlite Violence: துப்பாக்கியால் சுட உத்தரவு பிறப்பித்தது டிஜிபி டிகே ராஜேந்திரன்தான்: உயர்மட்ட தகவல்!!

தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன்தான் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தார் என்று அரசின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 24 May 2018, 2:13 pm
தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன்தான் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தார் என்று அரசின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil தூத்துக்குடி துப்பாக்கி சூடு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு


தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ. குமெரெட்டியாபுரம் கிராம மக்கள் 99 நாட்கள் போராட்டம் நடத்தினர். இறுதி நாளான 100வது நாளில் தூத்துக்குடி மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட கடந்த 22 ஆம் தேதி 18 கிராம மக்கள் முயற்சித்தனர்.

முன்னதாக, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது பின்னர் வன்முறையாக மாறி, முன்னறிவிப்பு எதுவுமின்றி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளது.

துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தது யார் என்பதை இன்னும் வெளிப்படையாக அரசு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தது தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டைம்ஸ் நவ் டிவிக்கு அளித்த பேட்டியில் பெயர் வெளியிட விரும்பாத அரசு உயர் அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டக் கலெக்டர் சந்தீப் நந்தூரி அளித்த பேட்டியில், ''நகரில் அமைதியான சூழலை ஏற்படுத்துவதே என்னுடைய முதல் பணி. கலவரம் மற்றும் இதைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்த யார் அனுமதி அளித்தது என்பது குறித்து தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீதி விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொள்ளும்'' என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தூத்துக்குடியின் பல பகுதிகளில் காவல்துறையினர் வீடுகளுக்குள் புகுந்து இளைஞர்களை கைது செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ஸ்டெர்லைட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. லைசென்சை புதுப்பிக்காத காரணத்தால், ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு இன்று காலை மின் இணைப்பை மாவட்ட நிர்வாகம் தடை செய்தது. மாசுக்கட்டுபாட்டு வாரியம் கேட்டுக் கொண்டதையடுத்து மாவட்ட நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

அடுத்த செய்தி