ஆப்நகரம்

ஆர்கே நகரில் நாளை மறுநாள் விடப்பட்ட விடுமுறை ரத்து

ஆர்கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு வருகிற 12-ம் தேதியன்று அந்த தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNN 10 Apr 2017, 9:27 pm
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு வருகிற 12-ம் தேதியன்று அந்த தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil april 12 holiday cancelled in rk nagar
ஆர்கே நகரில் நாளை மறுநாள் விடப்பட்ட விடுமுறை ரத்து


ஆர்கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, வருகிற 12-ம் தேதியன்று; அதவாது நாளை மறுநாள், அந்த தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அனைவரும் வாக்களிக்கும் விதத்தில், ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட அரசு அலுவலகங்கள், அரசுத் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல், ஆர்கே நகர் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் பணியாற்றி வந்தால், அவர்களும் வாக்களிக்கும் விதமாக அவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு வருகிற 12-ம் தேதியன்று அந்த தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் ரத்தானதை தொடர்ந்து, பொது விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பணப்பட்டுவாடா புகார்களையடுத்து, இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
April 12 holiday cancelled in RK Nagar

அடுத்த செய்தி