ஆப்நகரம்

கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்த அறப்போர் இயக்கத்தினர் கைது!

தமிழகத்தில் நிலவும் சூழலியல் பிரச்சனைகள், அரசியல் தலைவர்களின் ஊழல்களுக்கு எதிராக அறப்போர் இயக்கத்தினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

Samayam Tamil 13 Jul 2019, 4:28 pm
சென்னை தரமணியிலுள்ள கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்த அறப்போர் இயக்கத்தினரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்த அறப்போர் இயக்கத்தினர் கைது!
கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்த அறப்போர் இயக்கத்தினர் கைது!


தமிழகத்தில் நிலவும் சூழலியல் பிரச்சனைகள், அரசியல் தலைவர்களின் ஊழல்களுக்கு எதிராக அறப்போர் இயக்கத்தினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் தன்னார்வலர்களுடன் சேர்ந்து நீர் நிலைகளை சுத்தப்படுத்துவது, ஏரி,குளங்களை தூர் வாருவது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், தரமணியிலுள்ள கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்ய அறப்போர் இயக்கத்தினர் இன்று சென்றனர். அப்போது அங்கு வந்த போலீசார், உரிய அனுமதியின்றி ஏரியை ஆய்வு செய்ததாகக் கூறி பத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தினர் கூறுகையில், “2015 ஆம் ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு அதற்கான காரணங்கள் என்ன? அதை எப்படி மீட்டெடுப்பது என்பது குறித்து கடந்த 4 வருடங்களாக அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஆய்வு செய்து வருகிறோம். பல்வேறு ஏரிகளை ஆய்வு செய்து அரசிடம் பிரச்னைகள் குறித்த தகவல்களை கொடுத்து மீட்டெடுத்து வருகிறோம்.

அதனடிப்படையில் இன்று கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்ய வந்திருந்தோம். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அனுமதி வாங்காமல் எப்படி ஆய்வு செய்யலாம் எனக்கூறி எங்களை கைது செய்ததாக தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் வேளச்சேரி- தரமணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அறப்போர் இயக்கத்தினரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டபத்தின் முன்பு 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

சென்னையில் தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தி, தூர்வாரும் பணியில் அரசு மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. அப்படி இருக்கும்போது தாமாக முன்வந்து களப்பணிகளை மேற்கொள்ளும் அறப்போர் இயக்கத்தினரை போலீசார் கைது செய்த சம்பவம் தன்னார்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி