ஆப்நகரம்

அழிந்து போகும் தமிழனின் அடையாளம்; கீழடி தொல்லியல் சுவடு குறித்து எச்சரிக்கை!

கீழடி தொல்லியல் சுவடு குறித்த எச்சரிக்கையை தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் விடுத்துள்ளார்.

Samayam Tamil 24 Jun 2018, 7:47 pm
மன்னார்குடி: கீழடி தொல்லியல் சுவடு குறித்த எச்சரிக்கையை தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் விடுத்துள்ளார்.
Samayam Tamil Amarnath_Ramakrishnan
அமர்நாத் ராமகிருஷ்ணன்


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உலக தமிழர் பேரமைப்பு சார்பில் தமிழர் வரலாற்று தொன்மை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய இந்தியத் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், தமிழகத்தில் மிகப்பெரிய அளவிலான அகழாய்வு கீழடியில் நடைபெற்றது. அதாவது 102 தொல்லியல் குழிகள் தோண்டி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில் 5,000 தொல் பொருட்கள் கிடைத்தன. இதன்மூலம் தமிழர்கள் குறித்து ஏராளமான உண்மைகள் தெரியவந்துள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக செங்கற்களால் ஆன கட்டடங்களில் வாழ்ந்துள்ளோம். அப்போது சாயத் தொழிற்சாலைகளும் இருந்துள்ளன.

நகரமயமாதல் அதிகரித்து வருவதால், கீழடி ஆதாரங்கள் அழிந்து போகக்கூடிய அபாயத்தில் உள்ளன. எனவே உடனடியாக அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக நாம் 10 ஆண்டுகள் செலவிட வேண்டும்.

அவ்வாறு செய்தால் முழுமையான தகவல்களைப் பெறலாம் எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர் பாரதி செல்வன், தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பராமரிக்காக நிரந்தர வைப்பு நிதியாக 1,65,0000 ரூபாயை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனிடம் அளித்தார்.

Archaeological department Officer warns time delay will destroy remains in Keezhadi.

அடுத்த செய்தி