ஆப்நகரம்

'ஒரே தலைமை வேண்டும்'... அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சலசலப்பு..!

சென்னை: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்

Samayam Tamil 7 May 2021, 6:02 pm
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை பிடித்துள்ளது. திமுக தனித்து 125 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதிமுக 65 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
Samayam Tamil eps ops


தேர்தல் முடிவுகளை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் முதல்வர் பதவியேற்றார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் பொறுப்பை பெற்றுக்கொண்டனர். இந்நிலையில், அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் சென்னையில் இன்று நடக்கவுள்ளது.

இக்கூட்டத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரையும் அதிமுக எம்எல்ஏக்கள் தேர்வு செய்யவேண்டும். எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவருக்கிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 65 எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க தயாராகும் பாமக..!

முன்னதாக எதிர்க்கட்சி தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வரவேண்டும் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், ஓபிஎஸ் அனுபவசாலி, பொறுமைசாலி என்பது எடப்பாடி பழனிசாமிக்கே நன்கு தெரியும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை அதிமுக அலுவலகத்தில் இது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க வந்த ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வந்துள்ளது. அதிமுகவில் ஒரு தலைமைதான் இருக்க வேண்டும் என்று அவர்கள் கூச்சலிட்டதாக பரபரப்பட்டு தகவல் வந்துள்ளது. இன்னும் சில நேரத்தில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் யார் என்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் இப்போதே ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.

அடுத்த செய்தி