ஆப்நகரம்

கொரோனாவை நெருங்க விடாத அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள்..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை மாவட்ட வாரியாக காண்போம்

Samayam Tamil 15 Jan 2021, 8:01 pm
தமிழகத்தில் இன்றைய (15-01-2021) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.
Samayam Tamil file pic


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 621 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,29,573 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 26 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது 6,299 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 180 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 228746 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 222716 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4059 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53475 ஆக அதிகரித்துள்ளது. 52188 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 662 பேர் பலியாகியுள்ளனர்.


பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கு 2260 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2238 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஒருவர் மட்டுமே இங்கு சிகிச்சையில் உள்ளார். அதுபோல அரியலூரில் இன்று புதிய நோயாளிகளின் வரவு ஒன்றுமில்லை. இதுவரை இங்கு 4660 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 14 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

'எடப்பாடி முதல்வரா? கீ... கீ... கீ...', முதல்வருக்கு ஜோதிடம் பார்த்த அமைச்சர்..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60,406 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,47,61,304 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 805 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,11,023 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,251 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி