ஆப்நகரம்

நீட் தேர்வு எழுத கம்மலை விற்று மகளை கேரளாவுக்கு அனுப்பிய தாய்!

நீட் தேர்வு எழுத கம்மலை விற்று கேரள மாநிலத்திற்கு மகளை, தாய் அனுப்பிவைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 5 May 2018, 1:46 pm
நீட் தேர்வு எழுத கம்மலை விற்று கேரள மாநிலத்திற்கு மகளை, தாய் அனுப்பிவைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil skabvfabnsldna


நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் போதுமான அளவு தேர்வு மையங்கள் அமைக்கப்படாததால் தமிழக மாணவர்கள் பலருக்கும் வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வை எழுத கம்மலை விற்று தனது மகளை பெற்றோர் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளத்தைசேர்ந்த மாணவி ஹேமா. இவர் நாளை நடக்கும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். முதலில் திருச்சியில் தேர்வு மையம் இருக்கும் என்று எதிர்பார்த்த ஹேமாவுக்கு, எர்ணாக்குளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார்.
அரசு கொடுக்கும் 1000 ரூபாய் போதாத நிலையில், பயணச் செலவு, தங்கும் விடுதி, உணவு ஆகியவற்றுக்கு ரூ.3000 முதல் 4000 வரை செலவாகும் என்பதால் கடும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார் ஹேமா.

பணம் புரட்ட வழி இல்லாததால், ஹேமா அணிந்திருந்த கம்மலை விற்று பணத்தை பெற்றுள்ளார் அவரது தாய் கவிதா. அந்த பணத்தை வைத்து திருச்சி சந்திப்பில் இருந்து எர்ணாகுளத்திற்கு நீட் தேர்வு எழுத இருவரும் புரப்பட்டு சென்றுள்ளனர்.

ஹேமா போல், பல மாணவர்கள் கடன் வாங்கியும், நகையை அடகு வைத்தும் நீட் தேர்வு எழுதச் சென்றுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மனநிலையில் மாணவரகள் தேர்வு எழுதினால் அவர்கள் எப்படி தேர்ச்சி பெறுவார்கள் என்று மாணவர்களின் பெற்றோர் வேதனை தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி