ஆப்நகரம்

ஈஷா மையத்தில் ஓவியர் அக்பர் பதம்ஸி மறைவு!

புகழ்பெற்ற ஓவியக் கலைஞரான அக்பர் பதம்ஸி கோவை ஈஷா மையத்தில் காலமானார்.

Samayam Tamil 7 Jan 2020, 4:02 pm
இந்தியாவின் தலைசிறந்த ஓவியக் கலைஞர்களின் ஒருவரான அக்பர் பதம்ஸி நேற்றிரவு கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் காலமானார். அவருக்கு வயது 91.
Samayam Tamil அக்பர் பதம்ஸி


இவர், தனது இறுதி நாட்களை ஈஷா ஆசிரமவாசியாக வாழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு ஈஷா ஆசிரமவாசிகள் சத்குரு சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

“அக்பர் பதம்ஸி, வண்ணம் மற்றும் கலைநயத்தின் வித்தகர், வாழ்வின் கடைசிப்பகுதியை எங்களுடன் ஈஷா யோகா மையத்தில் கழித்தது எங்கள் அதிர்ஷ்டம். உங்கள் வர்ணஜாலத்தை, வரும் தலைமுறைகள் பலவும் கண்டு ரசிக்கும், ஊக்கம்பெறும்.” என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் பதிவில் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

ஒருமையில் திட்டிய விவகாரம்: ஜெ.அன்பழகன் சஸ்பென்ட்!

நவீன இந்திய ஓவியக் கலைஞரான அக்பர் பதம்ஸி, நவீன இந்திய ஓவியக்கலையில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.15 ஆண்டுகளுக்கு மேல் ஈஷாவுடன் தொடர்பில் இருந்துள்ளார். இவரது இறுதிச் சடங்கு நேற்றிரவு ஈஷா யோக மையத்தில் நடைபெற்றது.

உயர் சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு: மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்!

என்னையும் எனது படைப்பையும் எந்த லேபிளுக்கு கீழும் அடக்கிவிடமுடியாது என அக்பர் பதம்ஸி முன்னர் கூறியுள்ளார். ஓவியம் மட்டுமல்லாமல் இவர் சிற்பி, இயக்குநர், புகைப்படக் கலைஞர் எனப் பன்முகம் கொண்டவர்.

நாளைக்கும் மழை: இன்னும் எவ்வளோ நாள் தெரியுமா?

இஸ்லாமிய சமூகத்தில் பிறந்திருந்தாலும் அக்பர் பதம்ஸி விவேகானந்தரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி