ஆப்நகரம்

தமிழ்நாட்டில் 'காலேஜ் டைமிங்' விரைவில் மாற்றம்!!

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் இரு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்படவுள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது..

Samayam Tamil 13 May 2020, 6:40 pm
தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் பெரும்பாலானவற்றில் 'கோ எட்' எனப்படும் ஆண், பெண் இருபாலரும் ஒரே நேரத்தில் கல்வி பயிலும் நடைமுறை உள்ளது. இந்த நடைமுறைக்கு மாறாக. சில அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும், பல தனியார் கல்லூரிகளிலும் தினமும் இரு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Samayam Tamil arts college


'டே காலேஜ்', 'இவினிங் காலேஜ்' என்று இரு வேளையாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் டே காலேஜில் பெரும்பாலும் மாணவர்களும். இவினிங் காலேஜில் பெரும்பாலும் மாணவிகளும் கல்வி பயின்று வருகின்றனர்.

இவற்றில் டே காலேஜ் வகுப்புகள் தினமும் காலை 7:30 - 9 மணிக்குள் ஆரம்பித்து, மதியம் 12: 30 - 2 மணிக்குள் நிறைவடைகின்றன. இதேபோன்று இவினிங் காலேஜ் வகுப்புகள் மதியம் 12.30 -2 மணிக்குள் ஆரம்பிக்கப்பட்டு மாலை 4:30 -6 மணிக்குள் நிறைவடைகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: சிஇஓ-க்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!!

இந்த இருசுழற்சி முறை வகுப்புகளால், டே காலேஜ் முறையில் பயிலும் மாணவர்கள் காலை 7:30 மணிக்கே கல்லூரிகளுக்கு வர வேண்டியுள்ளது.

இதன் காரணமாக, நாள்தோறும் அவர்கள் காலை உணவை சரிவர சாப்பிட முடியாத நிலை நீடிக்கிறது. இதன் விளைவாக, ரத்தசோகை போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.

எனவே, மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, கலை, அறிவியல் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள இரு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மறுபரிசீலனை செய்ய ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்!

இதற்கு மாற்றாக, கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு முன்புவரை நடைமுறையில் இருந்த ஒரு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும்.

இந்த முறையில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளின் நிர்வாகங்களுக்கும், கல்லூரி கல்வி இயக்குநர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஒரு சுழற்சி முறை வகுப்புகள், நடப்பு கல்வியாண்டிலேயே (2020 -21) நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி