ஆப்நகரம்

ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் – நீதிபதி கடிதம்

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 3 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளாா்.

TOI Contributor 8 Dec 2017, 3:07 pm
மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 3 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளாா்.
Samayam Tamil arumagasamy writes to tn gov to extend commission
ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் – நீதிபதி கடிதம்

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக பல்வேறு சா்ச்சைகள் எழுந்த நிலையில், சா்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி மூலம் ஒருநபா் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

விசாரணை அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் தொிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் அவா் தொடா்புடைய அனைத்து நபா்களுக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

மேலும், ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஏதேனும் புகாா் கூற விரும்புபவா்கள் விசாரணை ஆணையத்திடம் தொிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆணையம் அமைக்கப்பட்டதான நோக்கம் முழுமையாக நிறைவுபெறவில்லை.

எனவே விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசின் பொதுத்துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த செய்தி