ஆப்நகரம்

வயது வந்தோருக்கான கல்வித் திட்டம்: தேர்வு எழுதிய 4000 பேர்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக அரசின் வயது வந்தோருக்கான கல்வித்திட்டத்தின் கீழ் பயிலும் எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடைபெற்றது. 200 மையங்களில் 4000 பேர் தேர்வு எழுதினர்.

Samayam Tamil 30 Jul 2021, 1:10 pm
தமிழகத்தில் படிப்பறிவு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க கொண்டுவரப்பட்டத் திட்டமான புதிய வயது வந்தோருக்கான கல்வித் திட்டம் கற்போம், எழுதுவோம் இயக்கம்.
Samayam Tamil tn Adult Education Program


இத்திட்டத்தில் முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத வயது வந்தோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு தகுதி அடிப்படையில் மதிப்பீடு வழங்கப்படுகிறது. இந்த மதிப்பீட்டு முறையில் தேர்ச்சியடைபவர்கள் நேரடியாக 10-ஆம் வகுப்பு தேர்வு எழுத தகுதி பெறுவார்கள்.
தமிழ்நாட்டிற்கு மேலும் 3000 பேருந்துகள்: அமைச்சர் சொன்ன தகவல்!
மேலும், அவர்கள் உயர்கல்வி படிப்பையும் மேற்கொள்ள முடியும். இதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 200 பள்ளிகளில் தலா 20 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இத்திட்டத்தில் பயிலும் வயது வந்தோருக்கு கடந்த மார்ச் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மதிப்பீட்டு நிகழ்வு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு நேற்று துவங்கியது.
ஆகஸ்ட் தொடக்கம் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்!
இரண்டாம் நாளான இன்று மயிலாடுதுறை தருமபுரம் குருஞான சம்பந்தர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற மதிப்பீட்டு முறையில் மாணவர்களின் அடிப்படை எழுத்தறிவு மற்றும் கற்றல் திறனை, மாவட்ட கல்வி அலுவலர் குமார் ஆராய்ந்து மதிப்பீடு செய்தார். மாவட்டம் முழுவதும் 200 மையங்களில் 4 ஆயிரம் பேர் தேர்வு எழுதுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி