ஆப்நகரம்

தமிழக மக்களே உஷார்... ஏடிஎம்மில் இந்த வார இறுதியில் பணம் இருக்காது!!

இந்த வார இறுதியில் தமிழகத்தில் இருக்கும் 20,000 ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாத சூழல் ஏற்படலாம். ஆதலால், பணம் தேவைப்படுவோர் தற்போதே சுதாரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Samayam Tamil 23 Sep 2019, 11:36 am
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த 40,000த்துக்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் வரும் வியாழக் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
Samayam Tamil Bank Strike


இது நேரடியாக தமிழகத்தில் மட்டும் 6000 கோடி அளவிற்கான பண பரிவர்த்தனையை பாதிக்கும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆர். சேகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ''தமிழகத்தில் இருக்கும் ஏடிஎம்மில் அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் பணம் போடப்படும். அதுவும் பாதிக்கப்படும். புதன் கிழமையுடன் ஏடிஎம்மில் பணம் போடுவது நிறுத்தப்படும். இந்தப் பணம் வெள்ளிக் கிழமை காலை வரைதான் வரும்.

வாடிக்கையாளர்களுக்கு எந்த இடையூறும் வரக் கூடாது என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். ஆனால், அரசின் நடவடிக்கைகளால் நாங்கள் போராடும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளோம். வங்கிகள் திறந்திருக்கும். ஆனால், ஊழியர்கள் பணியில் ஈடுபட மாட்டார்கள்'' என்றார்.

‘தமிழகத்துக்கு மோடி வேணாம், பச்சை தமிழன் எடப்பாடி போதும்’: பால்வள அமைச்சர் சர்ச்சை பேச்சு!

நாடு முழுவதும் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் மட்டும் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் வேலை நிறுத்தத்தால், 2.12 லட்சம் ஏடிஎம்-களில் 48,000 கோடி அளவிற்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்படும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய பணி நிரவல் ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தல்!

வங்கிகள் இணைப்பு, சம்பள உயர்வு, போதிய அளவிற்கு பணிக்கு ஊழியர்களை நியமித்தல், வாடிக்கையாளர்களின் சர்வீஸ் சார்ஜ் குறைத்தல் என்று பல்வேறு கோரிக்கைளை முன் வைத்துள்ளனர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

அடுத்த செய்தி