ஆப்நகரம்

குப்பை தொட்டியில் பணத்தை வீசிய “விளம்பர விரும்பி” ஆட்டோ டிரைவர் கைது!

குப்பை தொட்டியில் பணத்தை வீசிய “விளம்பர விரும்பி” ஆட்டோ டிரைவர் கைது!

TOI Contributor 12 Nov 2016, 9:51 pm
காஞ்சிபுரம் : 500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே நடுத்தர மக்கள் பெரும் கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். பணம் வைத்திருக்கும் பலரும் மூட்டையில் வைத்து சில இடஙற்களில் வீசியும், எரித்தும் வருவதை காணமுடிகிறது. இந்நிலையில் ஒரு விளம்பரத்திற்காக குப்பை தொட்டியில் பணத்தை வீசிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil auto driver arrested after throw money to dust bin for publicity
குப்பை தொட்டியில் பணத்தை வீசிய “விளம்பர விரும்பி” ஆட்டோ டிரைவர் கைது!


மதுராந்தகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாந்தகுமார் மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றதும் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார். 500 ரூபாய் நோட்டுகளை குப்பை தொட்டியில் வீசி அதைப்புகைப்படம் எடுத்த ஃபேஸ்புக்கில் போட்டால் அதிக லைக்குகள் கிடைக்கும் என்று எண்ணிய இவர், 8000 ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை குப்பைத்தொட்டியில் போட்டு ஃபோட்டோ எடுத்துள்ளார். அதனை திரும்ப எடுக்கச்செல்லும் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அடுத்த செய்தி