ஆப்நகரம்

குழந்தைகள், பெண்களை காப்பாற்ற வெளியானது காவலன் ஆப்!

குழந்தைகள், பெண்களை காப்பாற்ற காவலன் என்ற செல்போன் ஆப் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ கே விஷ்வநாதன்...

Samayam Tamil 11 Dec 2019, 7:31 pm
சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் காவலன் செல்போன் ஆப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
Samayam Tamil images (7)


தலைவர் பதவி ஏலம் விட்டால் இதுதான் கதி - அமைச்சர் ஜெயக்குமார்!

இந்த நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியில் மாணவிகள் காவல் துறையின் எஸ்ஓஎஸ் காவலன் ஆப்பை எப்படி பதிவிறக்கும் செய்து, எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கப்பட்டது. அதன்படி, மாணவிகளும் இந்த எஸ்ஓஎஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்திப் பார்த்தனர்.

மாணவிகளிடம் எஸ்ஓஎஸ் ஆப் குறித்த துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டது. துண்டுப் பிரசுரங்களை மேற்கு மண்டல இணை ஆணையர் ஜெயக்குமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் நிகழ்ச்சியில் பேசியதாவது:



பிரச்சினை யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதனால், நாம் பிரச்சினைகளைச் சமாளிக்க எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டுதான் காவலன் செயலி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

ரஜினிதான் முதல்வர் வேட்பாளர், புது வருடத்தில் முக்கிய அறிவிப்பு..! அவரே சொல்லிட்டாரு...

மக்கள் யாருக்கும் பிரச்சினை வரக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். எனினும், தற்காப்பு காரணங்களுக்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.


அதேபோல், இந்த ஆப் வழியாக பொது மக்களும் நீங்கள், உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்க வழி செய்யப்படும். விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி