ஆப்நகரம்

ராமநாதபுரம்: அலையாத்திக் காடுகளை பாதுகாக்க விழிப்புணர்வு முகாம்!

பருவநிலை மாற்றம் தொடர்பாக தற்போது அதிகளவில் பேசப்படுகிறது. அதன் பாதிப்புகளை மிக அதிகமாக உணரத் தொடங்கிவிட்டதே இதற்கான காரணமாக இருக்கிறது.

Samayam Tamil 17 Dec 2019, 12:14 pm
ராமநாதபுரம் வன உயிரின சரகம் சார்பில் அலையாத்தி காடுகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
Samayam Tamil அலையாத்திக் காடுகளை பாதுகாக்க விழிப்புணர்வு முகாம்


ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் து.கோ.அசோக்குமார் அலையாத்தி காடுகள் பாதுகாப்பு, அதன் அவசியம், மேலும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடற்பசு, கடல் ஆமை, கடல் புற்கள், கடற்குதிரை, கடல் அட்டை வேட்டையாடுவதால் கடல் வளம் பாதிக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி தேவிபட்டினம், முத்து ரெகுநாதபுரம், எஸ்.பி.பட்டினம், தொண்டி ஆகிய கடலோர பகுதி மக்களிடம் நெல்லை அரும்புகள் அறக்கட்டளை கலைக்குழு மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல்: ரேஸில் யாருக்கெல்லாம் இடம்.. இன்று முடிவு!

அலையாத்திக் காடுகள் என்பது கடலுக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட களிமண் நிறைந்த வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டல கடலோரப் பகுதிகளில் உப்பு நீரில் வளர்வது ஆகும். இவை புயல், வெள்ளம், மண் அரிப்பு, கடல் நீர் வெள்ளப்பெருக்கு போன்றவற்றிலிருந்து மனிதர்களைக் காக்கும் அளப்பரிய பணியைச் செய்து வருகின்றன.

சட்டத் திருத்தத்துக்கு ஏதாவது உரிய காரணம் இருக்கிறதா? - ஆர்ப்பாட்ட உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் காரணமாக இனி வரும் காலங்களில் அதிகளவிலான புயல்கள் உருவாகும் என்று சூழலியளார்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற அலையாத்திக் காடுகளே மக்களை காக்கும் அரணாக அமையும். எனவே இதன் பாதுகாப்பு மிக அவசியமாகிறது.

ரூ. 27 கோடியில் மெரினாவை அழகுபடுத்தும் திட்டம் உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி விளக்கம்!

இந்நிலையில் ராமநாதபுரம் வனச் சரகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் வனச்சரக அலுவலர் சு.சதீஷ், வனவர் சந்துருராஜா, அரும்புகள் அறக்கட்டளை இயக்குனர் லதா, இந்திய வன உயிரின ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சி முனைவர்கள் , வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி