ஆப்நகரம்

கழிவு நீா் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சுதந்திரம் அமைச்சர் சரோஜாவிடம் ஒப்படைப்பு

கடந்த சுதந்திர தினத்தின் போது கழிவு நீா் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட சுதந்திரம் சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா், சமூக நலத்துறை அமைச்சா் சரோஜாவிடம் ஒப்படைத்தாா்.

Samayam Tamil 18 Sep 2018, 4:12 pm
கடந்த சுதந்திர தினத்தின் போது கழிவு நீா் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட சுதந்திரம் சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா், சமூக நலத்துறை அமைச்சா் சரோஜாவிடம் ஒப்படைத்தாா்.
Samayam Tamil baby_boy_chennai


கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சோ்ந்த கீதா என்பவா் தனது வீட்டின் அருகில் இருந்த கழிவு நீா் தொட்டியில் இருந்து பிறந்து சில மணிநேரங்களேயான ஆண்குழந்தையை மீட்டாா். இதனைத் தொடா்ந்து அந்த குழந்தை அரசு வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்ததைத் தொடா்ந்து ஆண் குழந்தைக்கு சுதந்திரம் என்று பெயா் சூட்டப்பட்டது.

1.9 கிலோ எடை இருந்த குழந்தை சென்னை குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. தற்போது குழந்தை 2.17 கிலோவை எட்டியுள்ளது. இதனைத் தொடா்ந்து முறைப்படி சுதந்திரத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா், சமூக நலத்துறை அமைச்சரான சரோஜாவிடம் ஒப்படைத்தாா்.


அதன் பின்னா் சுதந்திரம் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடா்ந்து மாதம் தோறும் சுதந்திரத்தின் பராமரிப்பு செலவுக்காக முதல்வரின் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் என்று அமைச்சா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி