ஆப்நகரம்

அதிமுக அவைத் தலைவர்: ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்த எடப்பாடி!

அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதன் பின்னணி குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 1 Dec 2021, 11:32 am
அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு ஒரு பொதுக்குழு கூட்டமும், இரு செயற்குழு கூட்டங்களும் நடத்தப்படுவது அதிமுகவில் வழக்கம். ஜனவரி மாதம் ஒரு செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாவது செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
Samayam Tamil edappadi palanisamy


சசிகலா விவகாரம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், உட்கட்சித் தேர்தல் என பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. 280 செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு செயற்குழு கூட்டத்திலும் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படுவர். ஆனால் இம்முறை எந்த சிறப்பு அழைப்பாளரும் அழைக்கப்படாமல் நடைபெறுகிறது.

கூட்டத்தில் பங்கேற்பவர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஓபிஎஸ் நீக்க அறிவிப்பில் யார் கையெழுத்திடுவது? கட்சிக்குள் கேட்கும் குமுறல்!
அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் சில மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்த நிலையில் அந்த பதவி காலியாக இருந்தது. யார் அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் யார் என்ற விவாதம் கட்சிக்குள் நடைபெற்று வந்தது. அவைத் தலைவர் தான் பொதுக்குழுவை கூட்டமுடியும்.

ஓபிஎஸ் ஆதரவாளரா, இபிஎஸ் ஆதரவாளரா யார் அந்த பதவியை கைப்பற்றுவது என பல பெயர்கள் அடிபட்டன. அப்போது ‘எம்ஜிஆர் காலத்து நிர்வாகி ஒருவரை, கொங்கு மண்டலம் சாராத ஒருவரை, அவைத் தலைவர் பதவிக்கு கொண்டு வரலாம், சிறுபான்மையினர் ஒருவரை அந்தப் பதவிக்கு கொண்டு வந்தால் அதிமுக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பெயரும் மாறும்’ என ஓபிஎஸ் தரப்பு கூறிவந்தது.
ஜெயலலிதா நினைவிடத்துக்கு கிளம்பிய சசிகலா: இரட்டை சிக்கல்!
அந்தவகையில் தற்போது அக்கட்சியின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தின் பின்னணி குறித்து அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம். “தமிழ்மகன் உசேனை நியமித்ததன் மூலம் எடப்பாடி பழனிசாமி ஒரே கல்லில் இரு மாங்காய்களை அடித்துள்ளார். ஒபிஎஸ் தரப்பு முன்வைத்த பட்டியலில் தமிழ்மகன் பெயர் இருப்பதால் ஓபிஎஸ்ஸுக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் சிறுபான்மையினர் நலப் பிரிவு தலைவர் அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து நீக்கியதால் கட்சிக்குள் சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தமிழ்மகன் உசேனுக்கு பதவி வழங்கியதன் மூலம் அந்த விமர்சனத்தை தவிர்க்கலாம் என்றும் கணக்கு போடுகிறார்” என்கிறார்கள்.
E.V.VELU உதயநிதியை எ.வ.வேலு புகழ்வது இதற்கு தானா?
“அதேசமயம், தமிழ்மகன் உசேன் தற்காலிக அவைத் தலைவர்தான் என்பதையும் மறந்துவிடவேண்டாம்” என்றும் ட்விஸ்ட் வைக்கிறார்கள்.

அடுத்த செய்தி