ஆப்நகரம்

அதிமுக அலுவலக வன்முறை வழக்கு: முன் ஜாமீன் நிபந்தனைகள் தளர்வு!

அதிமுக அலுவலக கலவர வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களின் முன் ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

Samayam Tamil 1 Oct 2022, 7:06 am
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பதிவான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு விதிக்கபட்ட முன் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil aiadmk violence


சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக கூடுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ஈ.பி.எஸ். தரப்பு ஆதரவு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 37 பேர், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் 27 பேர் என 64 பேர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
ரேஷன் ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு; கட்டாயம் கடைபிடித்திட அறிவுறுத்தல்!
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இரு தரப்பை சேர்ந்த 64 பேரும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கினார்.

இந்த நிபந்தனைகளை தளர்த்தக்கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 64 பேரும் தாக்கல் செய்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே விதித்த நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி