ஆப்நகரம்

சென்னை கோயில்களில் ஆடி மாத தரிசனத்திற்கு தடை: செக் வைத்த அறநிலையத்துறை

வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களில் ஆடி மாச தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 31 Jul 2021, 8:39 pm
சென்னை மாவட்ட முருகன் மற்றும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி மாத தரிசனத்திற்கு அறநிலையத்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


அது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் மற்றும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி கிருத்திகை, ஆடி செய்வாய், ஆடி வெள்ளி தரிசனத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.

சென்னை வடபழனியில் உள்ள அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், கந்தகோட்டம், அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், பாடி அருள்மிகு படவேட்டம்மன் திருக்கோயில் மற்றும் அருள்மிகு தேவி பாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் மற்றும் அம்மன் திருக்கோயில்களில் பக்தர்கள் நேர்த்தி கடனாக தீமிதி திருவிழா, காவடி சுமந்தும், பொங்கல் மற்றும் மாவிளக்கு படையிட்டு தரிசனம் செய்வார்கள்.

'தமிழகப் பெண்களின் வாழ்கையை மிகவும் எளிதாக்கிய திட்டம்'- கனிமொழி பயணம்

தற்போது, கொரோனா தொற்று பரவும் அச்சம் உள்ளதால் ஆகஸ்ட் 1 முதல் 9 முடிய அரசு கூட்டங்களை தவிர்க்க அறிவுறுத்தியுள்ள நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி காலை பூஜைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறநிலையத்துறையின் சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிப்ரியா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி