ஆப்நகரம்

பீட்டா தடை, பிசிஏ சட்ட திருத்தம் மூலமே நிரந்தர வெற்றி: ஆர்.ஜே.பாலாஜி உறுதி

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பீட்டா மற்றும் பிசிஏ அமைப்புகளுக்கு தடை விதிப்பதன் மூலமே நிரந்தர வெற்றி கிடைக்கும் என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.

TNN 22 Jan 2017, 9:21 pm
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பீட்டா மற்றும் பிசிஏ அமைப்புகளுக்கு தடை விதிப்பதன் மூலமே நிரந்தர வெற்றி கிடைக்கும் என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
Samayam Tamil ban on peta and pca will be the only permanent success for jallikattu protests
பீட்டா தடை, பிசிஏ சட்ட திருத்தம் மூலமே நிரந்தர வெற்றி: ஆர்.ஜே.பாலாஜி உறுதி


ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள வானொலி அறிவிப்பாளரும் நகைச்சுவை நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி, பீட்டா தடை, பிசிஏ சட்ட திருத்தம் மூலமே ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நிரந்தர வெற்றி கிடைக்கும் தெரிவித்துள்ளார்.

அறவழியில் நடத்த போராட்டத்திற்குத்தான் ஒருமித்த ஆதரவு கிடைத்தது என்ற இவர் இந்த மாபெரும் புரட்சியின் நினைவாக ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழர் திருவிழாவாக அரசே நடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா. pic.twitter.com/SR3g0saDTd — RJ Balaji (@RJ_Balaji) January 22, 2017

அடுத்த செய்தி