ஆப்நகரம்

அப்பல்லோ மருத்துவமனைக்கு பெங்களூர் அம்ருதா நோட்டீஸ்

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உயிரியல் மாதிரிகள் உள்ளனவா?, அப்படி இருந்தால் அதை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என ஜெயலலிதா தன் அம்மா என உரிமை கோரும் அம்ருதா தொடர்ந்த வழக்கில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Jan 2018, 1:40 pm
சென்னை : அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உயிரியல் மாதிரிகள் உள்ளனவா?, அப்படி இருந்தால் அதை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என ஜெயலலிதா தன் அம்மா என உரிமை கோரும் அம்ருதா தொடர்ந்த வழக்கில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil bangalore amrutha notice to apollo hospital
அப்பல்லோ மருத்துவமனைக்கு பெங்களூர் அம்ருதா நோட்டீஸ்


ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் 75நாட்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் மகள் என கூறிவரும் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனக்கும் தன் தாய்க்கும் மரபணு சோதனை நடத்த வேண்டும்.

ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து சோதனை நடத்த வேண்டும் வைணவ முறைப்படி சம்பிரதாய சங்குகள் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது அடிப்படை ஆதாரமற்றது என கூறி உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. உரிய ஆதாரங்களை கொண்டு வேண்டுமென்றால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறை வழங்கியது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள அம்ருதா, ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து சோதனை மேற்கொள்ளக்கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்படியில்லை எனில், அப்பல்லோவில் டி.என்,ஏ சோதனை செய்ய ஜெயலலிதாவின் உயிரியல் கூறுகள் உள்ளனவா, அப்படி இருந்தால் அதை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அம்ருதா மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி