ஆப்நகரம்

நமக்கு எதுக்கு வம்பு: கிரீடத்தை கலெக்டரிடம் ஒப்படைத்தது வங்கி!

கடந்த 2014ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை மறைந்த முதல்வா் ஜெயலலிதா வழங்கினார்.

TNN 27 Oct 2017, 4:34 pm
கடந்த 2014ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை மறைந்த முதல்வா் ஜெயலலிதா வழங்கினார்.
Samayam Tamil bank officials handed over the crown to the madurai district collector instead of aiadmk
நமக்கு எதுக்கு வம்பு: கிரீடத்தை கலெக்டரிடம் ஒப்படைத்தது வங்கி!

குருபூஜை தவிர மற்ற நாட்களில் இந்த கவசமானது மதுரை மேலுரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த வாரம் குருபூஜை நடைபெற உள்ளதால் தங்க கவசமானது அதிமுக.வில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அந்த கட்சி இரு பிரிவாக உள்ளதால் யாரிடம் வழங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டது. பின்னர், எடப்பாடி தரப்பு அ.தி.மு.க.விடம் தங்க கிரீடத்தை ஒப்படைக்க வங்கி நிர்வாகம் முடிவு செய்தது.

இதனை எதிர்த்த டிடிவி தரப்பு, வங்கி அதிகாரிகளிடம் இன்று கடிதம் ஒன்றை வழங்கினர். இதனையடுத்து, வங்கி அதிகாரிகள் கிரீடத்தை மதுரை மாவட்ட கலெக்டரிடம் கிரிடத்தை வழங்கியுள்ளனர். இது ராமநாதபுரம் கலெக்டரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bank officials handed over the crown to the Madurai district collector instead of AIADMK Treasurer.

அடுத்த செய்தி