ஆப்நகரம்

மதுரையில் ஜல்லிக்கட்டுக்காக 60 கிராமங்களில் கடையடைப்பு

ஜல்லிக்கட்டு நடத்த கோரி மதுரையில் உள்ள 60 கிராமங்களில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

TNN 11 Jan 2017, 9:31 am
மதுரை : ஜல்லிக்கட்டு நடத்த கோரி மதுரையில் உள்ள 60 கிராமங்களில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர்.
Samayam Tamil banth in madurai for jallikattu
மதுரையில் ஜல்லிக்கட்டுக்காக 60 கிராமங்களில் கடையடைப்பு


ஜல்லிக்கட்டுக்கு தடை வித்தித்து கடந்த 2014-ம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்தது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தாண்டு ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் எழுந்துள்ளனர். இந்தநிலையில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டுமென்று கல்லூரி மாணவர்கள் , பொதுமக்கள் என அனைவரும் தற்பொழுது போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்தநிலையில் மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி