ஆப்நகரம்

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.

TNN 30 Sep 2017, 10:35 am
சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil banwarilal purohit appointed as the governor of tamil nadu
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!


தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டிருந்தார். தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், நிரந்தர ஆளுநரை நியமிக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் தமிழகத்திற்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இவர் மேகாலயா ஆளுநராக பதவி வகித்து வந்தார். இந்த சூழலில் மேகாலயாவிற்கு புதிய ஆளுநராக கங்கா பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் அசாம், பீகார் மாநிலங்களுக்கும், அந்தமானுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Banwarilal Purohit appointed as the Governor of Tamil Nadu.

அடுத்த செய்தி