ஆப்நகரம்

நிவருக்கு பின் புதிய புயல்: வங்கக் கடலில் உருவாகும் ஆபத்து!

தெற்கு வங்கக் கடலில் நவம்பர் 29ஆம் தேதியன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 26 Nov 2020, 5:29 pm

வங்கக் கடலில் நவம்பர் 24ஆம் தேதி நிவர் புயல் உருவானது. இப்புயல் நேற்று அதிதீவிர புயலாக உருவெடுத்தது. நிவர் புயல் நேற்று இரவு 11.30 மணியளவில் புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 2.30 மணியளவில் புயல் கரையை கடந்தது.
Samayam Tamil வங்கக் கடல்


இதனால் புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் கனமழை பொழிந்து இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பயிர்கள், படகுகள் என ஏராளமான பொருட்கள் சேதமடைந்துள்ளன. இன்னும் பல்வேறு இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்நிலையில், நவம்பர் 29ஆம் தேதியன்று தெற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல்... உயிர் சேதம் எவ்வளவு? -புள்ளிவிவரங்களுடன் சொல்லும் அமைச்சர்!

நவம்பர் 29ஆம் தேதிக்கு பிறகு அடுத்தடுத்த நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து தென் தமிழக பகுதிகளை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி