ஆப்நகரம்

உயிருக்கு உயிரான தந்தை காலமானார்: பீலா ராஜேஷ் சோகம்!

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்

Samayam Tamil 23 Aug 2020, 7:40 pm
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த சமயத்தில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர் பீலா ராஜேஷ். கொரோனா தடுப்பு பணிகளை முன்னின்றி செய்து வந்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். கொரோனா தொற்று தொடர்பான விவரங்களை தினமும் மீடியாக்களிடம் மாலை நேரத்தில் விளக்கியதன் மூலம் கவனம் பெற்றவர் பீலா ராஜேஷ்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வணிக வரித்துறைச் செயலாளராக அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு கூடுதல் சிறப்பு அதிகாரியாகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், பீலா ராஜேஷ் தந்தையும், சாத்தான்குளம் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் ராணியின் கணவரும், எல்.என்.வெங்கடேசன் காலமானார். தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட வெங்கடேசன் 1962 ஆம் பேட்ச் ஐ.பி.எஸ்.அதிகாரியாவார்.

த‌மிழக‌த்தி‌ல் 3.79 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

முன்னாள் டி.ஜி.பி.யான எல்.என்.வெங்கடேசன் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சென்னை கொட்டிவாக்கத்தில் காலமானார்.

பீலா ராஜேஷின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, காவல்துறையில் உயர் பொறுப்புகளை பெற்று சிறப்பாக செயல்பட்ட வெங்கடேசன், காவல்துறையினருக்கு முன்மாதிரியாக விளங்கியவர் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி