ஆப்நகரம்

அரசு பள்ளிகளில் பயிலும் திறமைமிக்க மாணவர், ஆசிரியர்களுக்கு புரட்சியாளர் விருது!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் திறமைமிக்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து வழங்கப்படும் புரட்சியாளர் விருதுகள் விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

Samayam Tamil 24 Mar 2019, 12:39 pm
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் திறமைமிக்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து வழங்கப்படும் புரட்சியாளர் விருதுகள் விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
Samayam Tamil அரசு பள்ளிகளில் பயிலும் திறமைமிக்க மாணவர், ஆசிரியர்களுக்கு புரட்சியாளர் விருது!
அரசு பள்ளிகளில் பயிலும் திறமைமிக்க மாணவர், ஆசிரியர்களுக்கு புரட்சியாளர் விருது!


யூ ஆர் லவ்ட் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் திறமைமிக்க மாணவர்களையும், திறம்பட பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையும் தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவித்து விருது வழங்கி வருகிறது.

இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் மாதம் கோவை அரசூரில் உள்ள கே.பி.ஆர்.கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான முன்னோட்ட விழா கல்லூரியில் நடைபெற்றது.

இதில் பிரபல திரை இசையமைப்பாளரும், இயக்குனருமான ஜேம்ஸ் வசந்தன் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் இலக்கியம், கலை, விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்பம், சமூக நலம், தலைமைத்துவம் போன்ற பல்வேறு திறமைகளை கண்டறிந்து கடந்த 5 வருடங்களாக விருதுகள் வழங்கி வருகிறோம். மேலும் குடும்ப சூழ்நிலைகளை தாண்டி இம்மாணவர்களின் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து உழைக்கும் பெற்றோருக்கும், இவர்களின் வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்களையும் கவுரவித்து புரட்சியாளர் விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கே.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் சி.இ.ஓ நடராஜன், நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வு பெற்ற குமார், செயல்பாட்டு இயக்குனர் டேனியல் ஜேக்கப், சிவா சுப்ரமணியம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி