ஆப்நகரம்

ஓபிஎஸ் கொடுத்த சிக்னல்... திருச்சி முப்பெரும் விழாவில் சசிகலா? கடைசி நிமிட ட்விஸ்ட்!

திருச்சியில் நடைபெறும் முப்பெரும் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் உடன் சசிகலா வருவாரா? எனப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 23 Apr 2023, 1:42 pm
ஓ.பன்னீர்செல்வம் நாளைய தினம் திருச்சியில் முப்பெரும் விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி ராமச்சந்திரன் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முப்பெரும் விழாவிற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 1956ல் அறிஞர் அண்ணா இங்கே தான் மாநாடு நடத்தினார்கள்.
Samayam Tamil big turning point at trichy mupperum vizha for o panneerselvam says panruti ramachandran
ஓபிஎஸ் கொடுத்த சிக்னல்... திருச்சி முப்பெரும் விழாவில் சசிகலா? கடைசி நிமிட ட்விஸ்ட்!


அண்ணா எடுத்த முடிவு

அப்போது நாங்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்தோம். இந்த சமயத்தில் தான் கட்சியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினேன். முதலில் வட்ட பிரதிநிதியாக என்னை தேர்வு செய்தார்கள். திருச்சி மாநாட்டில் தான் தொண்டர்களை பார்த்து அண்ணா கேட்டார். தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்று வாக்கெடுப்பு நடத்தினார். அதன்பிறகு தேர்தலில் போட்டியிட்டோம்.

​ஓபிஎஸ் ஆலோசனை

திருப்பம் தரும் ​திருச்சி

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க முடிவை தந்தது திருச்சி என்பதை மறக்கவே முடியாது. 67 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இங்கே வந்திருக்கிறோம். நான் புரட்சித் தலைவர் காலத்தில் இருந்து கட்சியில் இருக்கிறேன். ஒருமுறை மதுரையில் எம்.ஜி.ஆர் மன்ற மாநாடு நடைபெற்றது. மறுநாள் செய்தியாளர்களை சந்தித்து எம்.ஜி.ஆர் பேசினார். அப்போது நானும் உடனிருந்தேன்.


ஓபிஎஸ் திருச்சி முப்பெரும் விழா ஏற்பாடுகள் எப்படி? தெற்கில் அரசியல் பல்ஸ்... அடுத்த மெகா பிளான் இதுதானாம்!

​எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு

உங்களுக்கு அரசியலில் வாரிசு யார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, ரத்தத்தின் ரத்ததமான தொண்டர்கள் தான் வாரிசு எனப் பதிலளித்தார். புரட்சித் தலைவரின் வழியில் தொண்டர்களை வரவழைத்து அவர்களே கட்சியை நடத்தட்டும் என்று சொல்வதற்காக தான் இந்த திருச்சி மாநாடு. நமது கழகத்தில் ஒருங்கிணைப்பாளரை உறுப்பினர்கள் தேர்வு செய்கிறார்கள்.

​ஓபிஎஸ் உடன் 3 எம்.எல்.ஏக்கள்

அவருக்கு எதிராக, முரணாக செயல்படுத்துகிறது என்றால் இந்த பொதுக்குழுவை கலைத்து விட்டு புதிய பொதுக்குழுவை தேர்வு செய்யும் அதிகாரம் எம்.ஜி.ஆர் வகுத்த சட்ட விதிகளில் இருக்கிறது. 184 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த போது, எம்.ஜி.ஆர் உடன் ஒரே ஒரு எம்.எல்.ஏ தான் வந்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் 3 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். எனவே நீங்கள் எம்.ஜி.ஆரை விட செல்வாக்கு உள்ளவர் என்று கூறினேன்.

ஜானகி எம்.ஜி.ஆர் கொடுத்த சொத்து

இந்த முப்பெரும் விழா எதற்காக நடைபெறுகிறது என்பதன் நோக்கத்தை நாளை நீங்கள் பார்ப்பீர்கள் என்றார். இதையடுத்து வைத்திலிங்கம் பேசுகையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கான இடத்தை 1987ல் ஜூலை 29ஆம் தேதி எம்.ஜி.ஆருக்கு ஜானகி கொடுத்தார். அந்த இடம் ஜானகி அம்மாவின் சொத்து. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.​


மீண்டும் குழப்புகிறதா தேர்தல் ஆணையம்? கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி

சசிகலா வருவாரா?

நாளை வரை அவகாசம் இருக்கிறது. எனவே எதையும் அறுதியிட்டு கூற முடியாது. கடைசி நிமிடத்தில் கூட திருப்பம் வரலாம். அதேசமயம் தனிப்பட்ட நபர்கள் கட்சியை விட்டு செல்வதால் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஒரு மாவட்டத்தின் முக்கிய நிர்வாகி சென்றுவிட்டார் என்றால், அந்த மாவட்டமே சென்றுவிட்டதாக அர்த்தம் இல்லை. அதிமுக தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரில் யாருக்கு இருக்கிறது என்பதை நாளை நீங்களே பார்த்து சொல்லுங்கள் என்று கூறினார்.

எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி