ஆப்நகரம்

மதுபான விலையை 5% உயர்த்துவதற்கான சட்டதிருத்த மசோதா பேரவையில் தாக்கல்

தமிழக சட்டமன்றத்தில் மதுபான விலையை 5% உயர்த்துவதற்கான சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

TNN 23 Mar 2017, 4:15 pm
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் மதுபான விலையை 5% உயர்த்துவதற்கான சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
Samayam Tamil bill passed in tn assembly regarding tasmac liquor rate
மதுபான விலையை 5% உயர்த்துவதற்கான சட்டதிருத்த மசோதா பேரவையில் தாக்கல்


தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் வீரமணி, மாநிலத்தின் வருவாயை பெருக்கும் வகையில், மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். மதுபானங்களுக்கு 5% வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து அதுதொடர்பான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நிறைவேற்றப்பட்டால் அனைத்து மதுபானங்களின் விலையும் உயரும். வரும் ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நாடு முழுவதும் அமலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Bill passed in TN assembly regarding Tasmac liquor rate.

அடுத்த செய்தி