ஆப்நகரம்

பறவை காய்ச்சல் அலெர்ட்: சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

இறைச்சிக் கடைகளில் பறவைகள் அடுத்தடுத்து உயிரிழந்தால் உடனே மாநகராட்சிக்கு தெறிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Jan 2021, 6:49 pm
இறைச்சிக் கடைகளில் ஒரே நேரத்தில் 3க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென இறக்கும் பட்சத்தில் உடனடியாக கோட்ட சுகாதார ஆய்வாளருக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil file pic


அதுதொடர்பாக சென்னை பெருநகர ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' கடைகளில் உள்ள கோழி கூண்டுகளை நுகர்வோர் தொடாதவாறு தூரத்தில் வைக்க வேண்டும் எனவும். கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூண்டுகளை குளோரின் டை ஆக்சைடு உள்ளிட்ட கிருமிநாசினிகளை கொண்டு கடை உரிமையாளர்கள் தினசரி இரு முறை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இறந்த பறவைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பறவைகளின் இறைச்சியை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல்இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு 11 நெறிமுறைகளை வகுத்துள்ள சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை, அவற்றை கடைப்பிடிக்காவிட்டால் பொதுசுகாதார சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

'பாஜக முதல்வர் வேட்பாளர் நமச்சிவாயம்'..! என்னையா நடக்குது?

அதோடு நுகர்வோரும் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக வேக வைத்த பின்னரே உண்ண வேண்டும் என'' இவாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி