ஆப்நகரம்

பீஸ் கெடச்சாலும் வெங்காய தயிர் பச்சடி கிடைக்காது..! பிரியாணி பிரியர்களுக்கு வந்த சோதனை...

தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு எதிரொலியாக சென்னையில் பிரியாணி விலை 50 ரூபாய் வரைக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Nov 2019, 4:56 pm
தமிழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக அங்கு வெங்காய விவசாயம் சேதமடைந்ததால் வழக்கத்தை விட சென்னைக்கு கொண்டுவரப்படும் வெங்காயம் பெருமளவு குறைந்துள்ளது.
Samayam Tamil பீஸ் கெடச்சாலும் வெங்காய தயிர் பச்சடி கிடைக்காது..! பிரியாணி பிரியர்களுக்கு வந்த சோதனை...


'வலி உயிரை கொல்லுது'... இடுப்பில் போட்ட ஊசி உடைந்த அவலம்... வாலிபர் சோகம்...


இதனால் விலை உயர்வு ஏற்பட்டு சென்னையில் பெரிய வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 140 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் எதிரொலியாக பிரியாணி விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு உணவு கலாசாரத்தை பொறுத்தமட்டில் வெங்காயத்தின் பங்களிப்பானது இன்றியமையாத ஒன்று. குறிப்பாக பிரியாணி தயார் செய்யவும், தயிர் பச்சடி செய்யவும் வெங்காயம் அதிக அளவு தேவைப்படுகிறது.

சென்னையில் பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பில் ஒரு நாளைக்கு ஒரு டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்படும். ஆனால் கடுமையான விலை உயர்வால் தற்போது அரை டன் மட்டுமே வாங்க முடிகிறது என கூறுகின்றனர்.

பொங்கலுக்கு ரூ 1000: உள்ளாட்சித் தேர்தலில் பிரதிபலிக்குமா?

இதனால் பிரியாணி விலையானது 50 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. நடுத்தர உணவகத்தில் சிக்கன் பிரியாணி 130 வரைக்கும், மட்டன் பிரியாணி 180 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சாலையோர கடைகளில் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது.

அடுத்த செய்தி