ஆப்நகரம்

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணியை உருவாக்கி வருகிறது: ரவிசங்கர் பிரசாத்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி, பல கட்சிகளோடு இணைந்து வலுவான கூட்டணியை உருவாக்கி வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

Samayam Tamil 15 Feb 2019, 2:07 pm
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி, பல கட்சிகளோடு இணைந்து வலுவான கூட்டணியை உருவாக்கி வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
Samayam Tamil ravi


வேலூர் மாவட்டம், மோட்டூரில் பாரதிய ஜனதா கட்சியின் பாரதிய ஜனதா கட்சி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மகா சக்தி கேந்திரம் பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்டத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் நரேந்திரன், மாவட்டத்தலைவர் தசரதன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்துகொண்டு பேசுகையில், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பல கட்சிகளோடு இணைந்து வலுவான கூட்டணியை உருவாக்கி வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை பாஜக கூட்டணி வெற்றி பெற்று கைப்பற்றும்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் உள்ள சட்டசிக்கல்களை எல்லாம் கலைந்து, அங்கு சட்டபடியே பாஜக ராமர் கோயிலை கட்டும். மேலும் புதியதாக மத்திய அமைச்சரவையில் மீன் வளத்துறை என்ற ஒரு தனி அமைச்சகம், மீனவர்கள் நலனுக்காக விரைவில் ஏற்படுத்தவுள்ளோம்.

இந்தியா வலுவான நாடாக இருக்க வேண்டுமென்றால் பாரதிய ஜனதா கட்சி தான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். எதிர்க்கட்சியெல்லாம் ஒருங்கிணைந்து ஒரு கொள்கையில்லாத, யார் தலைவர் என்று கூற முடியாத திட்டமில்லாத ஒரு கூட்டணியாகும். இதனால் நாட்டிற்கும் பயனில்லை மக்களுக்கும் பயனில்லை என்று பேசினார்.

அடுத்த செய்தி