ஆப்நகரம்

நயினார் நாகேந்திரன்: அய்யோ, தப்பா புரிஞ்சுகிட்டீங்க, நான் அப்படி சொல்லல!

நயினார் நாகேந்திரன் அதிமுக குறித்த தனது விமர்சனத்துக்கு விளக்கமளித்துள்ளார்.

Samayam Tamil 26 Jan 2022, 11:01 am
பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் பேச்சு அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக அதிமுகவினர் புகார் அளித்துள்ள நிலையில் அவர் தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார்.
Samayam Tamil nainar nagendran


சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பள்ளி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், ஹெச்.ராஜா,சி.பி ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரன், “அதிமுக எங்களது கூட்டணியில் இருக்கிறது, இல்லை என்பது இரண்டாவது விஷயம். சட்டமன்றத்தில் தைரியமாக ஒரு ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவரை கூட பார்க்க முடியவில்லை. அதிமுக எதிர்கட்சி இல்லை. சட்டமன்றத்தில் பேசாமல் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இல்லாமல் இருந்தாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே” என்று பேசியிருந்தார்.
பிப்ரவரி 1 முதல் என்னென்ன மாற்றம்? முதல்வர் நடத்தும் ஆலோசனை!
அதிமுகவைச் சேர்ந்தவர்கள் நயினார் நாகேந்திரனுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதனுடன், இதற்கு மேலும் பாஜகவுடனான கூட்டணி அவசியம்தானா? என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி உள்பட பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின்போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை. போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்” என்று விளக்கமளித்துள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூ? அமைச்சர் சொன்ன தகவல்!
நயினார் நாகேந்திரன் விளக்கமளித்தாலும் அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. பொதுவெளியில் மைக் பிடித்து மோசமாக பேசிவிட்டு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக ட்விட்டரில் பதிவிடுவது எந்த விதத்தில் நியாயம். இத்தனைக்கும் அதிமுகவால் வளர்ந்த நயினார் இப்படி பேசலாமா என கொதிப்பில் உள்ளனர் அதிமுகவினர்.

அடுத்த செய்தி