ஆப்நகரம்

ஜெயலலிதா மீது பாஜக கடும் கோபத்தில் இருந்தது; டிடிவி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பாஜக கடும் கோபத்தில் இருந்ததாக ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Feb 2018, 8:51 am
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பாஜக கடும் கோபத்தில் இருந்ததாக ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil bjp modi was angry with jayalalithaa says ttv dinakaran
ஜெயலலிதா மீது பாஜக கடும் கோபத்தில் இருந்தது; டிடிவி


சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி வைக்கவில்லை என்றும், அதற்கு மாறாக ‘மோடியா, இந்த லேடியா’ என மோடிக்கு எதிராக போட்டியிட்டு 37 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றார் என்றும் தெரிவித்தார்.

மேலும், இதன் காரணமாக ஜெயலலிதா மீது பாஜக கடும் கோபத்தில் இருந்ததாகவும், அந்த கோபத்தை அவர் மீது காட்ட முடியாததால் தற்போது ஜெயலலிதாவுடன் 30 வருடங்களாக இருந்த எங்கள் மீது காட்டுவதாகவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி