ஆப்நகரம்

விராலிமலையை கணக்கு வைத்து திமுகவில் அரசகுமார் ஐக்கியமா?

என்னை நிகழச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்று சொல்வதற்கு மாநில பொதுச்செயலாளர் நரேந்திரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று பாஜக தமிழக துணைத் தலைவர் அரசகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 2 Dec 2019, 5:56 pm
தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வருவார் என்று நான் பேசியதற்கான விளக்கத்தை தமிழக பொறுப்பாளரான முரளிதர் ராவிடம் அளித்து விட்டேன் என்று பாஜக தமிழக துணைத் தலைவர் அரசகுமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil பாஜக அரசகுமார்
பாஜக அரசகுமார்


புதுக்கோட்டையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ணன் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட அரசகுமார், ''தமிழக முதல்வராக விரைவில் ஸ்டாலின் பொறுப்பேற்பார். எம்.ஜி.ஆர் எனக்கு மிகவும் பிடித்த தலைவர். அவருக்கு பிறகு நான் மிகவும் மதிக்கக்கூடிய தலைவர் ஸ்டாலின். இவர் அனைத்துக் கட்சிகளையும் மதித்து நடக்கிறார். நேர்மையாக நடந்து கொள்கிறார்.

மக்களின் ஆதரவு ஸ்டாலினுக்கு நிறைய இருக்கிறது. இவர் உழைப்பால் உயர்ந்தவர். தமிழகத்தின் முதல்வர் ஆவதற்கு அனைத்து தகுதிகளும் இருக்கின்றன'' என்றார்.

ஸ்டாலின் தான் அடுத்த முதல்வராம்; என்ன ஆச்சு பாஜகவிற்கு!

இவரது இந்த பேச்சு பாஜகவில் மட்டுமல்ல, மற்ற அரசியல் கட்சிகள் வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலினை ஆதரித்துப் பேசிய அரசகுமாரை பாஜகவில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

அதிமுக அரசின் முகத்தில் கரியைப் பூச மக்கள் தயார்: மு.க.ஸ்டாலின்

பாஜக கடிதம்


''அரசகுமாரின் பேச்சு கண்ணியத்தையும் மீறிய செயலாக கருதப்படுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைக்கு கடிதம் எழுதி இருப்பதாக பாஜக பொதுச் செயலாளர் நரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், கட்சி தலைமையிடத்தில் இருந்து பதில் வரும் வரை கட்சி தொடர்பான நிக்ழச்சிகளிலும், ஊடக விவாதங்களிலும், கூட்டங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று அவருக்கு தடை விதித்துள்ளனர். இதற்கு அரசகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகி திமுகவில் விரைவில் அரசகுமார் ஐக்கியம் ஆவார் என்று கூறப்படுகிறது. 2020ஆம் ஆண்டு தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிடுவதற்கு அரசகுமார் திமுகவில் வாய்ப்பு கேட்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

அடுத்த செய்தி