ஆப்நகரம்

தமிழக பாஜகவை வலுப்படுத்த சென்னை வந்தார் அமித்ஷா!

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் வகையில் கட்சியினருடன் ஆலோசனை நடத்த பாஜக ததலைவர் அமித்ஷா சென்னை வந்துள்ளார்.

Samayam Tamil 9 Jul 2018, 1:29 pm
தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் வகையில் கட்சியினருடன் ஆலோசனை நடத்த பாஜக ததலைவர் அமித்ஷா சென்னை வந்துள்ளார்.
Samayam Tamil amit shah


2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை இப்போது இருந்தே பாஜக தலைவர் அமித்ஷா தொடங்கியுள்ளார். தமிழகத்தில் பாஜக நோட்டாவை விட பின்தங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் வகையில் கட்சி மேலிடம் முழு முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடி வாரியாக பாஜக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் வியூகத்தில், அக்கட்சியின் தலைவர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். அவரைசென்னை வந்த அமித்ஷாவை வரவேற்கதமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை, மாநில பாஜக பொறுப்பாளர் முரளிதார ராவ், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இல. கணேசன் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றனர்.

பின்னர், தமிழகத்தில் வாக்குச்சாவடி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களை அமித்ஷா சந்திக்கிறார். மேலும், இந்து முன்னணி நிர்வாகிகளையும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை கேந்திரா அமைப்பினர் பொறுப்பாளர்கைளையும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், #GobackAmitShah என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் ட்ரண்ட் ஆகி வருகிறது. இதற்கு முன்பு காவிரி போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அப்போது மோடியின் வருகைக்கு எதிராக #GoBackModi என்ற ஹேஸ்டேக் உலக அளவில் ட்ரண்ட் ஆகி முதல் இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி