ஆப்நகரம்

சிஏஏ ஆதரவு: தேனியில் பாஜக நடத்திய பேரணி!

தேனியில் பாஜக நடத்திய பேரணியில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

Samayam Tamil 28 Feb 2020, 6:12 pm
தேனியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பாஜகவினர் பேரணி நடத்தினர்.
Samayam Tamil தேனியில் பாஜக நடத்திய பேரணி


குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் போராட்டத்தில் ஈடுபடும் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் தேனியில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் 2000க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். பாஜக மட்டுமல்லாமல் இந்து அமைப்புகளும் கலந்துகொண்டனர்.

ரஜினியுடன் கூட்டணி: கமல் ஒப்பன் டாக் - உருவாகிறதா இன்னொரு மக்கள் நல கூட்டணி?

பேரணியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக செயல்படும் திமுகவினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தேனி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இருந்து தேனி ஸ்டேட் பேங்க் திடல் வரை பேரணி நடத்தப்பட்டது.

இஸ்லாமியர்களால் ஆடுகளின் கற்புக்கு ஆபத்து.! பிரியாணி புகாருக்கு இந்து முன்னணி பதிலடி!

“குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் என்கிற பெயரில் நாள்தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அமைதியைக் குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

அடுத்த செய்தி