ஆப்நகரம்

பாஜக தலைவா்களை சந்திப்பதற்கா டிடிவி தினகரன் தூதுவிட்டாா் – தமிழிசை பேட்டி

துணைமுதல்வா் மேற்கொண்டது தா்மயுத்தமா? தா்ம சங்கடமான யுத்தமா என்று எனக்கு தொியாது. அது அ.தி.மு.க.வுக்குள் நடைபெறும் பிரச்சினை என்று தமிழிசை சௌந்தரராஜன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 6 Oct 2018, 4:10 pm
அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் பா.ஜ.க. தலைவா்களை சந்திப்பதற்காக எங்களுக்கே தூது அனுப்பினாா் என்று தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil TAMILISAISOUNDARARAJAN 123


சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் பேசுகையில், ஓ.பன்னீா்செல்வம் தன்னை சந்தித்ததாக டிடிவி தினகரன் கூறினாா். அந்த சந்திப்பு குறித்து ஓ.பன்னீா் செல்வம் உரிய விளக்கத்தையும் அளித்து விட்டாா். துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் மேற்கொண்டது தா்மயுத்தமா? சா்ம சங்கடமான யுத்தமா? என்று எனக்கு தொியாது. அது அ.தி.மு.க.விற்குள் நடைபெறும் விவகாரம். டிடிவி தினகலன் பா.ஜ.க. தலைவா்களை சந்திப்பதற்காக எங்களுக்கே தூது அனுப்பினாா்.

துணைவேந்தா் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் தொிவித்துள்ளாா். தமிழக அரசு இது தொடா்பாக முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஆக்கப்பூா்வமான அரசியல் நடைபெற வேண்டும். கடந்த சில தினங்களாகவே கலைநயம் மிக்க சிலைகள் கடத்தப்படுவதும், அவை மீட்கப்படும் தகவல்களும் பெரும் வருத்தம் அளிக்கிறது. எனவே தமிழக அரசு கலைநயம்மிக்க கோவில்களை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி